கடலை மாவு சப்பாத்தி
தேவையான பொருட்கள்
கடலைமாவு 1 1/2 கோப்பை
மைதா மாவு 3/4 கோப்பை
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
1/2 கொத்து கொத்தமல்லி இழைகள்
7 நறுக்கிய பச்சைமிளகாய்
சில புதினா இலைகள்
1/2 தேக்கரண்டி மாதுளம் விதைதூள்
1 மெல்லியதாக அரிந்த வெங்காயம்
1 தேக்கரண்டி சோம்பு
1 கோப்பை எண்ணெய்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவையும், மைதா மாவையும்கொட்டவும். அதில் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கொட்டி கிளரவும். சிறிதளவு தண்ணீரும் சற்று எண்ணெயும் ஊற்றி பிசையவும். (மாவு மெதுவாக ஆவதற்கு பால் ஊற்றுவார்கள். நன்றாகப் பிசைந்துவிட்டால் பால் தேவையில்லை) பிசைந்த மாவு கடினமாகவோ, அல்லது தண்ணீராகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.சிறிய சிறிய உருண்டைகளாப் பிடித்து சப்பாத்தி போல தேய்க்கவும். தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வறுக்கவும். எண்னெய் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் எண்ணெய் இல்லாமல் மெதுவான தீயிலும் சுடலாம். சப்பாத்தி போலச் சாப்பிட சுவையானது.
No comments:
Post a Comment