அள்ளஅள்ள செல்வமும் அழியா வறுமையும் நிறைந்த நாடு.
அரசியலும் அதிகாரமும் ஒருங்கிணைந்த நாடு
அன்பும் அகலா சோகமும் சீர் பெற்ற நாடு
ஆன்மீகமும் ஆசையும் அதிகம் கொண்ட நாடு
ஆண்டவன் சந்நதியும் ஆன்மீக தாகமும் அழியாமல் காக்கும் நாடு
ஆசான் வழிக்கல்வியும் ஆகமங்களையும் பெற்ற சிறந்த நாடு
இயற்கை தார்மீகமும் இன்னல் தரும் துன்பங்களும் ஒன்றே ஜனித்த நாடு
இசையின் ஆதியும் இரவலின் அந்தமும் தோன்றிய நாடு
இமயம்தொட்ட மனிதர்களையும் இலங்கையென்ற கண்ணீரையும் சுவாசிக்கும் நாடு
ஈதல் குணத்தினையும் ஈ போன்ற நடத்தினையும் கொண்ட செந்தமிழ் நாடு
உயரிய கொள்கைகளையும் உத்தமர் காந்தியையும் கண்ட நாடு
ஊர் போற்றும் அரியணையையும் ஊனமுற்ற மனத்தினையும் பெற்ற நாடு
எண்ணிய கணக்கினையும் எட்டில்லா புகழையும் கொண்ட நாடு
ஏணிபோல் உறுதி நெஞ்சையும் ஏமாற்றும் வஞ்சகத்தையும் வளர்த்துவிட்ட நாடு
ஐவகை நிலங்களையும் ஐந்தாம்பிறை படைபலத்தையும் தோற்ற நாடு
ஒற்றுமை பேச்சோடும் ஒன்றாத வீச்சோடும் சரிகின்ற நாடு
ஓமென்ற உச்சரிப்பும் ஒழிந்துப்போ என்ற சீர்க்கேடும் கொண்ட தன்னிலை பெற்ற நாடு
ஔடதமாய் வாழ்கின்ற கலாச்சார நெறியும் வளர்ந்துவரும் நாகரீக அநாகரீகமும் என்றும் பேணிக்காத்திடும் நாடு..என் இந்திய தாய்நாடு
No comments:
Post a Comment