
கண்ணாளனே.......!
உன்னை கண்ட நாள் முதலாய்
காதல் கொண்டேன்
கைகோர்த்து பேசி சென்ற
நாட்கள் கண்முன்னே தோன்றுதடா
கனவினில் உன் முகம் பார்த்திட
கண்களும் ஏங்குதடா
மனம் தன்னில் உன் நியாபகமோ
எப்போதும் அசைந்தாடுதடா
புன்னகையித்து கொண்டு சென்று
விட்டாய் என்னை
எப்போது திருப்பி தருவாய்
எனக்கு உன் நினைவுகளை
உன் மார்பினில் தலைசாய்த்திடும்
பொழுதுகள் எப்போது எனக்கு வாய்க்குமோ
என்றுமே உனக்கு நான் எனக்கு நீ
என்ற வார்த்தைகள்
எப்போது நிஜமாகிடுமோ
ஓராயிரம் நிந்தைகளுடன்
ஏங்கும் நெஞ்சம் என்று இளைப்பாறிடுமோ
கேள்விக்குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
நீ வருவாயென
காலமெல்லாம் காத்திருக்கும்
என் இதயம் நம் உயிர் காதலுடன்
No comments:
Post a Comment