Saturday, June 26, 2010
இன்று என் வாழ்விலே பொன்நாள்
பள்ளிப்பருவத்தில் பாடிய கிறிஸ்துவப்பாடல்
இன்று என் வாழ்விலே பொன்நாள்
கண்டேன் நான் கண்டிலா பேறு..
நன்றி என் தேவனே கோடி
தந்தேன் நான் தாள்மலர் சூடி...
ஆஆஆஆஆஆஹா....(4)
அன்னை தன் உதிரம் உதிர்த்திட்ட நேரம்
தந்தை நீர் என்னை தேர்ந்தெடுத்தீர்
அன்பினை பாலாய் அவள் தந்த வேளை
என் பணி எழுதி வைத்தீர்
இந்நாள் வரை என்னை கண்போல காத்தீர்
இறைவா உம் கருணைக்கு விளக்கம் நீர் ஆனீர்
Friday, June 25, 2010
வாழ்வின் இறுதி நாள்
ஜந்தாறு மாதங்கள்
என் தாயின் வயிற்றுக்குள்
மறைந்து சிறு துகள் போல
இப்புவியிலே ஜனித்து
காலத்தோடு நானும் சஞ்சரித்து
பாடப்புத்தகத்தையும் சுமந்து
கற்றறிந்த மாந்தர்கள்தம்
கடலில் விளைந்த முத்தை போல
பன்னிரு பருவங்களோடே
வளர்ச்சி கண்டு
மண்ணுலக வேந்தர்களின்
வாழ்வோடு லயித்து
வாழ்ந்த வாழ்வின்
இறுதி தருணம்
இன்றோ நாளையோ...
எதிர்பார்ப்பின்றி வாழ்வுண்டோ...
எதிர்பார்க்காமல் வாழ்பவருண்டோ..
முயன்றும் தோற்றுப்போனேன்...
இ லோகத்தில் வாழத்தகுதியற்றவளாய்..
என் கடைசி தருணம்
கண்ணயரும் நேரம்
என் சுற்றாரும் மற்றாரும்
என் இறப்பினில் மகிழ்வோரே
என்ற தேன் சொரியும் கீதம்
என் செவிக்கு ஒளித்திட்ட
அடுத்த நொடி
நானும் மறைவேனே...
பிறப்புக்கு
நான் செய்த நன்கென்ன????????
யாரும் அறியார்...
பூமிக்கு பாரமாய்
வாழ்வதை விட
நரகத்து காவலாய்
நிற்பதுதான் சரியோ...
என்றும் என் நினைவுகள்
என்னை விட்டு அகலா
வரம் வேண்டும் என் இறைவா..
இதுவே என் எழுத்துக்கு முற்று.......... யுவா......முற்றும்
Tuesday, June 22, 2010
விரசத்தின் வெளிப்பாடு
உள்ளம் மோதிக்கொண்டால் அது என்ன?
விரசத்தின் வெளிப்பாடு
இதயத்துடிப்பு..
கண்ணீர்த்துளிகள்.....
வாழ்க்கைப்பயணம்
ஒழுக்கம்
உன்னில் அடைபட்டு கொண்டிருக்கும் தீயநெறிகளை உடைத்தெறி...
வாழ்க்கை என்னும் பூந்தளிர் உன்னில் மலரும்
கனவுகள்
அன்று கண்ட காட்சி நிஜமானது
இன்று தோள் சாயும் உன் அன்பு கிடைத்ததால்
நண்பனாய் என்னுள் புகுந்து நாகரீக கள்வனானாய்
கல்லுக்குள் ஈரம்போல உன்னுள் அன்பு கண்டதை
பார்த்தே உருகின என் ஊமைநெஞ்சம்
கண்ணும் கண்ணும் நோக்கியே பலமணித்துளிகள்
மயங்கி பேசிக்கழித்தோம்
எண்ணிலடங்கா நாட்களை காதல் ஜூரம்
தாக்கியும் களித்தோம்
உன் ஒரிரு வார்த்தைகளை ஓராயிரம் தரம்
உச்சரிக்க கேட்டு ரசித்தேன்
உன் ஜாடை பரிமாற்றங்களை அங்கங்கமாய்
பார்த்து வியந்தேன்
நெடுந்தொலைவு கண்டினும் உன் முகம்
எனக்கு வைரலோகம் போலசட்டென
அருகில் நின்றே தலைசாய்த்திடும்
சிறு புன்னகையால்
என்ன சொல்ல ஏது சொல்ல
உன்னருகில் நிற்கும் தருணம்
யார் கேட்பார் என் மன சஞ்சலத்தை
அது உச்சரிக்கும் பாஷை
தான் என்னவோ
உனக்குள் மறைந்து நான்
என்னை தொலைத்தேன்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கண்டும் காணத்துடிக்கின்ற
என்னை உன்னில் சரிபாதியாக
அன்பின் அரிதாரம் நீயே
உன் வாசமே என்னில் கடைசி மூச்சாக
உன் பார்வையே என்னில் காட்சியாக
உன் புன்னகையே என்னில் பரிமாற்றமாக
அரிதாய்தோன்றியே என்னில் அன்பின் உறைவிடமாக
காதல் கவிதையே கண்ணின் கருவிழியே
முத்தாய் மலர்ந்த நறுமுகை மலரே
உன்னை கண்டபின் இம்மண்ணும் பிடித்துப்போனது
உன்னோடு பழகியப்பின் இவ்வாழ்வும் இனித்துப்போனது
உன்னில் சரணடைந்தேன் இப்புவியும் வசந்தமானதே!!!
சந்தர்ப்பம்
காணும் யோகம் வாய்க்குமோ என் விழிகளுக்கு!!!
மறைந்திடும் தருணம் உன் மடியினில்
சாயும் யோகம் வாய்க்குமோ என் இமைகளுக்கு!!!
காதல்
மானசீகமாய் சுமக்கிறேன்
உன்னையும் உன் கருவையும்
யாருக்கும் தெரியாத
என் மனக்கருவறையில்
நினைவுகளாக...காதல்
ஏக்கம்!!!
கண்ணாளனே.......!
கனவுகளுடன்....
நான் எப்போது புரிந்து கொள்வேன்
கற்றுக்கொடு கண்களால் கண்களுக்கு...!!!
Monday, June 21, 2010
என்னில் நீ மட்டும்!!!
உன் நிழலாய்! உன் சுவாசமாய்!
உன் மௌனமாய்! உன் ஸ்பரிசமாய்!
உன் பந்தமாய்! உன் சொந்தமாய்!
உன் தாகமாய்! உன் மோகமாய்!
உன் பாசமாய்! உன் நேசமாய்!
உன் தோழியாய்! உன் மனைவியாய்!
உன் ஏக்கமாய்! உன் இன்பமாய்!
உன் வெற்றியாய்! என் பாதையாய்!
உன் துடிப்பாய்! உன் சந்தமாய்!
உன் தவமாய்! உன் வெளிச்சமாய்!
உன் உறவாய்! உன் பெயராய்!
உன் வாழ்வாய்! உன் வசந்தமாய்!
நான்.........!!!!
இவையனைத்தின் முதற்பொருளாய்
என்றும் நீயே!
எந்தன் உயிரின் உறவே!
என்றும் உன்னில் நான் மட்டும்!
என்னில் நீ மட்டும்!!!
யுவாவின் சமையலறை
கடலை மாவு சப்பாத்தி
தேவையான பொருட்கள்
கடலைமாவு 1 1/2 கோப்பை
மைதா மாவு 3/4 கோப்பை
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
1/2 கொத்து கொத்தமல்லி இழைகள்
7 நறுக்கிய பச்சைமிளகாய்
சில புதினா இலைகள்
1/2 தேக்கரண்டி மாதுளம் விதைதூள்
1 மெல்லியதாக அரிந்த வெங்காயம்
1 தேக்கரண்டி சோம்பு
1 கோப்பை எண்ணெய்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவையும், மைதா மாவையும்கொட்டவும். அதில் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கொட்டி கிளரவும். சிறிதளவு தண்ணீரும் சற்று எண்ணெயும் ஊற்றி பிசையவும். (மாவு மெதுவாக ஆவதற்கு பால் ஊற்றுவார்கள். நன்றாகப் பிசைந்துவிட்டால் பால் தேவையில்லை) பிசைந்த மாவு கடினமாகவோ, அல்லது தண்ணீராகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.சிறிய சிறிய உருண்டைகளாப் பிடித்து சப்பாத்தி போல தேய்க்கவும். தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வறுக்கவும். எண்னெய் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் எண்ணெய் இல்லாமல் மெதுவான தீயிலும் சுடலாம். சப்பாத்தி போலச் சாப்பிட சுவையானது.
என்னைப்பற்றி
1.(பயனர்) பெயர் : யுவா
2.பெயர்க்காரணம்/ பொருள் : யுவராணி என்பது என் இயற்பெயர்...
3.சொந்தப்பெயர்( விருப்பமிருந்தால்) : இந்திராணி
4.உங்கள் செல்லப்பெயர் : குட்டிமா
5.உங்களைப்பற்றி சிலவரிகள் : நான் ரொம்ப வாலுங்க...குட்டிப்பிசாசு...அதிகமா பேசுவேன்..வாழ்க்கையில நிறைய சாதிக்கணும்னு ஆசைப்படுறேன்...மனசுல பட்டத பேசிடுவேன்..எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படுவேன்...எந்த சூழ்நிலையிலும் தவறான முறையில தடம் மாறக்கூடாதுன்றது என்னோட குறிக்கோள்....யாரையும் எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு நினைப்பேன்.என் மனச பாதிக்கற மாதிரி எது நடந்தாலும் எனக்குள்ளேயே நான் மறைச்சிடுவேன்...தனிமையில நிறைய டைம் அந்த மாதிரி அழுதுருக்கேன்.என்னால எல்லா சூழ்நிலையும் பேஸ் பன்ன முடியும்னு நம்புவேன்..கடவுள்கிட்ட அப்பப்ப பிரார்த்திப்பேன்...எனக்காக இல்ல...இந்த உலகத்துல இருக்குற எல்லாரும் நல்லா இருக்கனும்னு. என்னைக்காச்சும் தோணுச்சின்னா யாருக்காச்சும் குறிப்பிட்டு கேட்பேன்..
6.பிறந்த தேதி : July 25 அதாவது உண்மையான தேதி இதுதான்..ஜாதகம் மற்றும் பிறப்பு சான்றிதழ் அதுல இருக்கும்.. ஆனா ஏட்டளவில் மட்டும் தாங்க...August 18 என்பது தான் இப்ப எல்லாருக்கும் தெரியும்.
7.அதே நாளில் பிறந்த பிரபலம் எவரையாவது அறிவீர்களா : யாருக்கு தெரியும்...எனக்கு சத்தியாம தெரில..நம்ம கூகுல தேடிப்பார்த்தேன்..அதில கிடைத்தை விடயங்கள் இதோ.......
8.ஆண்டு ( விருப்பமிருந்தால்) : 1988 இதுல என்னங்க இருக்கு...நாங்க இளைஞிகள் தானே...வயச மறைக்க மாட்டேனுங்க... 9.அதே ஆண்டில் உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு: அதுவும் தெரில...நம்ம கூகுல தேடிப்பார்த்தேன்..அதில கிடைத்தை விடயங்கள் இதோ....... http://en.wikipedia.org/wiki/1988
10.உங்கள் குருதிப்பிரிவு : A1 POSITIVE (A1 +ve)
11.தேவையானோர்க்கு குருதிக்கொடையளிக்க விருப்பமுண்டா : நிச்சயம்...ஆனா இதுவரைக்கும் பலமுறை முயன்றும் என்னால கொடுக்க முடில..
12.தாய் நாடும் அதைப்பற்றி சில வரிகளும் : இந்தியா எனக்கு ரொம்ப புடிக்கும்..ஆனா இங்க நடக்குற நிகழ்வுகள் அதிகம் வருத்தப்பட வைக்கும்...
13.தாய் நாட்டுக்கடுத்து பிடித்த இன்னொரு நாடும், காரணங்களும் : தாய்நாடு தாங்க நான் இதுவரை பார்த்தது..வேற எங்கயும் இதுவரை போனதில்ல..
14.உங்களுக்கு பிடித்த பாட்டு: எல்லா மெலடி பாட்டுக்களும் புடிக்கும். ரொம்ப சந்தோஷமா இருந்தா குத்துப்பாடு நல்லா கேட்பேன். வருத்தமான சமயம் நம்ம சாங்ஸ்..தான். அதுவும் எனக்கு ஒரு சிநேகிதி போல தான். சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு ஒரு பழக்கம் இருக்கு..அது என்னன்னா எப்ப பார்த்தாலும் பாட்டு கேட்பேன். அது தான் எனக்கு பொழுதுபோக்கே. அதும் ரேடியோ தான்ங்க எனக்கு ஆல் இன் ஆல். படிக்குற வயசுல எங்க வீட்ல ரேடியோ தான் நான் கையில வச்சுட்டு இருப்பேன். தூங்கும் போது கூட அது தான் எனக்கு தலையணை. இப்ப மொபைல் போன். அது மட்டும் தான். ஹான்ட்ஸெட் காதுல மாட்டிக்கிட்டு பலதடவை நான் நிறைய விஷயத்துல இருந்து தப்பிச்சிடுவேன். யாராச்சும் பேசுறது புடிக்கலண்ணா....
15.அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு : கண்ணின் மணியே.. கண்ணின் மணியே போராட்டமா..
16.உங்களிடம் இருக்கும் ஒரு 'சில்லி' வழக்கம் : நகம் கடிப்பேன். கோபம் வந்தா என்னால கன்ட்ரோல் பன்ன முடியாது. ஆன இப்ப கத்துக்கிட்டேன். யாராச்சும் நடந்துக்குறது புடிக்கலண்ணா அவங்கள நல்லா முறைப்பேன். இல்லன்னா அந்த இடத்த விட்டு விலகி வந்துடுவேன். எனக்கு புடிக்காம பேசுனா மௌனமாயிடுவேன். இது ஒன்னு தான் என்னால இன்னமும் மாத்திக்க முடில. அததான் நான் நிறைய பன்றேன். புடிக்காத விஷயத்த யார் பேசினாலும் என்னால தாங்கிக்க முடில.
17.உங்களுக்கு பிடித்த நிறம்: நீலம்
18.உங்களுக்கு பிடித்த நாடு: இந்தியா
19.உங்களுக்கு பிடித்த உணவு: சிக்கன் பிரியாணி, தக்காள் சாதம், சப்பாத்தி
20.உங்களுக்கு பிடித்த உடை: புடவை(ஆனா எனக்கு கட்ட தெரியாது)
21.உங்களுக்கு பிடித்த பாட்டு: நிறையவே இருக்கு(காற்றின் மொழி, காற்றில் வரும் கீதமே, சலங்கை ஒலி பாடல்கள்)
22.உங்களுக்கு பிடித்த பழமொழி: லட்சியம் நிச்சயம் வெல்லும்..இது பழமொழியான்னு தெரியாது...ஆனா அடிக்கடி எனக்கு மனசுல தோன்ற வாக்கியம்...சிந்தனையுனும் சொல்லலாம். சிந்தைதனில் தூய்மை செயலாற்றுவதில் லட்சியம் சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது(எனது கணித ஆசிரியர் அடிக்கடி கூறுவது...) இன்னொன்னு படத்துல வந்தது... வாழ்க்கையே போர்க்களம்..வாழ்ந்துதான் பார்க்கனும்...போர்க்களம் மாறலாம்..போர்கள்தான் மாறுமா???
23.உங்களுக்கு பிடித்த புத்தகம்: வாரமலர் இடைவிடாம படிப்பேன்...அப்பப்ப சிறு சிறு நாவல்கள்...
24.உங்களுக்கு பிடித்த காலநிலை: குளிர் காலம் (அப்ப தானே சென்னையில ஜில்லுன்னு இருக்கும்....பனி கொட்டும்)
25.உங்களுக்கு பிடித்த விளையாட்டு: பில்லியர்ட்ஸ்
26.உங்களுக்கு பிடித்த நாள்: நவம்பர் 1
27.உங்களுக்கு பிடித்த நபர்: கவி
28.உங்களுக்கு பிடித்த உறவு: அப்பா
29.உங்களுக்கு பிடித்த திரைப்படம்: சிநேகிதியே
30.உங்களுக்கு பிடித்த நடிகர்: அப்ப எம்.ஜி.ஆர் இப்ப சூர்யா
31.உங்களுக்கு பிடித்த நடிகை: ஜோதிகா
32.உங்களுக்கு பிடித்த இசையமைப்பளர்: ஏ.ஆர்.ரகுமான்
33.உங்களுக்கு பிடித்த இயக்குனர்: கே.எஸ்.ரவிகுமார்
34.இப்போது அணிந்திருக்கும் உடை: சுடிதார்
35.இப்போது காதில் விழும் சத்தம்: கீபோர்ட் சத்தம்(நான் தான் டொப்பு டொப்புன்னு தட்டிக்கிட்டு இருக்கேனே)
36.இப்போது பக்கத்தில் இருப்பது: வாட்டர் பாட்டில், தொலைபேசி, காலண்டர், லேண்ட்லைன் போன்
37.இப்போதைய மனநிலை: என் தம்பியை நினைத்து கொண்டிருக்கிறேன் (அவனுடன் பேசி ஒரு வாரமாயிடுச்சி)
38.இப்போது உணரும் சுவை: இனிப்பு
39.இப்போது தங்கள் நேரம்: 06:00 பிஎம் (6 pm)
40.இப்போது சூழ்நிலை: மிதமான குளிர்(ஏசி ரூம் அதான்)
41.இப்போது மனதில் இருப்பது: என்ன தோணுதோ அதையும் பதியலாம்னு
42.இப்போது செய்ய நினைத்த வேலை: சீக்கிரமா நான் இந்த விடயத்துக்கு பதில் தந்துடனும்னு
43.உங்கள் முதல் நட்பு யார்: எங்க ஆசிரியர்(ஜந்தாவது வகுப்பு ஆசிரியை...ஹெலன் ஜாய்)
44.முதல் செல்லப்பிராணி: அப்படி ஏதுமில்ல...பிராணிகள பிடிக்க்கும்..ஆனா ரொம்ப பயப்படுவேன்...
45.முதல் படைப்பு (கதை, கட்டுரை, கவிதை...): ஹ்ம்ம்..கவிதை எழுதுனேன்...தன்னம்பிக்கைன்னு தலைப்பு அவ்ளோதான் நியாபகம் இருக்கு...கட்டுரை அடிக்கடி எழுதி பரிசுகள் வாங்கி இருக்கேன்.
46.முதல் காதல் (மாட்டிகிட்டிங்களா?): இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்
47.முதல் அழுதது: அப்பா அடிச்சப்ப
48.முதல் திரைபடம்: மனிதன்(குடும்பத்தோட நடந்தே தியேட்டருக்கு போய் பார்த்தோம்...மிகவும் பிடித்த படம்)
49.முதல் மேடை அனுபவம்: பள்ளி பருவத்துல அடிக்கடி மேடை அனுபவம் நிறைய இருக்கு(என்ன கீழே தள்ளிக்கூட விட்ருவாங்க...இறைவாழ்த்து பாடினது முதல் அனுபவம்...செய்திக்கூட வாசிப்பேன்...அப்ப)
50.முதல் பிரம்படி (யாரிடம்?): எங்க கணக்கு சார்கிட்ட(ஆறாம் வகுப்பு படிக்கும் போது..ஹோம் வெர்க் செய்யாம போனேன்)
51.இறுதியாக வாசித்த புத்தகம்: ஒரு ஆங்கில புத்தகம்(Leadership)
52.இறுதியாக குடித்த பானம்: காப்பி(ஆபிஸ்ல அதான் தராங்க)
53.இறுதியாக திருட்டு தம்: அப்படீன்னா
54.இறுதியாக தொலைபேசி அழைப்பு: அப்பாகிட்டயிருந்து காலைல பேசுனாரு
55.இறுதியாக திட்டு வாங்கியது: அப்பாகிட்ட
56.இறுதியாக கோபம்: அண்ணன்கிட்ட
58.இன்று செய்த நல்ல காரியம்: பஸ்ல டிக்கெட் பாஸ் பன்னேன்
59.வாழ்வில் முக்கியமா நினைப்பது: லட்சியம்,உண்மை
60.யார்கிட்ட உங்களை பத்தின விடயம் எல்லாத்தையும் சொல்லுவீர்கள்: என் தோழிகள் (தேவிகா, அர்ச்சனா)
61.இறப்பதற்கு முன்னர் செய்ய விரும்புபவை: இந்த உலகத்துல முடிஞ்சவரை என்ன சுத்தி இருக்குறவங்கள சந்தோஷமா பார்த்துக்கனும்...
62.குளப்படி செய்து அம்மா அப்பாவிடம் அடி வாங்கிய அனுபவம் உண்டா? அதை பற்றி சற்றே விபரிக்கவும். அடி வாங்கமாட்டேன்...திட்டு வாங்குவேன்...எங்க வீட்ல நான் ஒரே ஒரு பெண்....அதனால அதிகம் செல்லம்...நான் தப்பு பண்ணாலும் அத சொல்லிடுவேன்...அப்புறம் அப்பா அம்மா திட்டி முடிப்பாங்க...நான் எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி டீவி பார்த்துட்டு இருப்பேன்...
63.சட்டத்தை மீறிய செயல் ஏதாவது? நான் இதுவரை செய்தது இல்லை...ஆனா செய்றவங்கள பார்த்தா அவங்கள நிச்சயம் தண்டிக்கணும்னு தோணும்
64.தொலைக்காட்சியில் தோன்றி இருக்கின்றீர்களா? இதுவரைக்கும் இல்ல...
65.பொய் சொல்லுவிங்களா? கொஞ்சமா? நிறையவா? அது அப்பப்ப வரும்...கொஞ்சம் தான்...ஆனா உண்மைய யார்க்கிட்டயும் மறச்சதில்ல....விளையாட்டா சொன்னாலும் அப்புறம் உண்மைய ஒத்துக்குவேன்
66.உங்களுக்கு தெரியாத ஒரு நபர் உங்களிடம் உங்களை தெரிந்தவர் போல் கதைத்திருக்காங்களா? கதைத்திருக்காங்களா? இதற்கு சொல்றாங்களான்னு அர்த்தமா..அப்படி ஏன்கிட்ட சொன்னாங்கன்னா அவங்கள எப்படியாச்சும் கேள்வி கேட்டு மடக்கிடுவேன்...பிடிக்கலன்னா அவங்க தொடர்பை கட் பண்ணிடுவேன்
67.கல்லூரி காலத்தில் மறக்க முடியாத சம்பவம் இருக்கா? இருந்தால் சொல்லவும். அப்படி ஏதுமில்ல
68.வாழ்க்கையில் மிகவும் பிடித்த ஒன்று உங்களை விட்டு போகும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? இதுவரை அப்படி நடந்தது இல்ல...என்னை விட்டு ஏதோ பிரிஞ்சு போறமாதிரி தோணும்...கண்டிப்பா வருத்தப்படுவேன்...
69.அடிக்கடி செல்லும் சுற்றுலா இடம் : அப்படின்னு பார்த்தா என் அலுவலகம் தான்..இதுவரை சுற்றுலா ஊர் சுத்துனது மெரீனா, பெசன்ட்நகர் பீச்..அப்புறம் சினிமா, பார்க், கோவில்..என் பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போறதே எனக்கு சுற்றுலா மாதிரி தான் இருக்கும். இப்பலாம் அடிக்கடி பார்த்துக்க முடிறது இல்ல.
70.தற்போதைய பணியில் மன நிறைவு இருக்கிறதா : இருக்குன்னும் சொல்லலாம். இல்லைன்னும் சொல்லலாம். மனச பொறுத்து. இந்த அளவுக்கு ப்ரீடம் இந்த ஆப்ஸ்ல எனக்கு கிடச்சதுக்கு நன்றி. மத்தப்படி..பார்த்தா......
71.கடவுள் நம்பிக்கையுண்டா : இருக்கு. ஆனா எல்லா கடவுள்கிட்டயும் நான் ஒரே மாதிரி நடந்துக்குவேன். எனக்கு பேதம் பார்க்க தெரியாது. சாமின்னா அது ஒன்னு தான். நான் 12த் வரை படிச்சது ஒரு கிறிஸ்தவ பள்ளி. அதனால அது மேல நம்பிக்கை அதிகம். கடவுள்கிட்ட அடிக்கடி மண்டிப்போட்டு கோவில்ல வேண்டிக்குவேன். அடிக்கடி நிறைய விஷயத்துக்காக நான் அவரை டிஸ்டர்ப் பண்ணிருக்கேன். நான் எதாச்சும் தப்பு பண்ணா என்ன கண்டிருச்சுன்னு அவர்கிட்ட ஆர்டர் பண்ணிருக்கேன். எனக்கு உருக்கமாலாம் ப்ரே பண்ண தெரியாது. என்ன தோணுதே அதை அப்படியே கேட்பேன். அவரோட ஆசீர்வாதம் வேணும்னு நிறைய தடவ கேட்டுருக்கேன். ஆனா இப்பலாம் கோவில் போக முடிறதில்ல. வீட்லன்னு பார்த்தா அம்மா சாமி பாட்டு பாட சொல்லுவாங்க..ஆனா அதெல்லாம் இப்ப இல்ல. சோ. பாட்டு புக் வச்சு பாட்டு பாடுவேன். ஆனா சாமியே கும்பிடமாட்டேன். ஏன்னு கேட்ட்டா மனசுக்குள்ள வேண்டிப்பேன். அதுதான் இப்பவரைக்கும் ஃபாளோ பண்னிட்டு இருக்கேன். அப்ப பாடுன பாட்டு கந்தர்சஷ்டி கவசம், அம்மன் பாட்டு, இந்தமாதிரி போகும். சாமி பாட்டுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும். டீவில இப்ப கூட பார்த்தா ரொம்ப ஆர்வமா பார்த்துக்கிட்டே இருப்பேன். வரிவரியா மனப்பாடம் பண்ணிப்பார்ப்பேன். கடவுள்கிட்ட நான் சின்ன வயசில எதாச்சும் சின்ன சின்ன விஷயத்துக்கு வேண்டிக்கிட்டு அது உடனே நடந்துருக்கு. அந்தமாதிரி நிறைய சந்தோசப்பட்டுருக்கேன்.. அது பஸ் வரலையே ந்னு இருக்கலாம். இல்ல மார்க் கம்மியாடிச்சேன்னு இருக்கலாம். இல்ல யாராச்சும் திட்டிட்டாங்கண்ணு இருக்கலாம். அப்பலாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா அதுக்கு சமாதானமா எதாச்சும் எனக்கு சந்தோஷப்படுற மாதிரி நடந்துறும். டீச்சர் திட்டிட்டாங்கண்ணு வருத்தப்பட்டா அவங்க உடனே என்கிட்ட நல்ல விதம்மா பேசிடுவாங்க. எனக்கு அது ஆச்சரியாமா இருக்கும். அது கடவுள்கிட்ட நான் சொன்னது தானோன்னு நினைச்சுக்குவேன். ஒரு சமயம் நான் சஞ்சாயிகா பைசா அதாவது பள்ளிக்கூடத்துல பைசா சேமிக்க இந்த திட்டம் இருந்துச்சு. அதுக்கு நான் தாங்க ப்ப பொறுப்பு திங்கள் கிழமையிலயிருந்து புதன்கிழமை வரை யார்யாரெல்லாம் காசு கொடுக்குறாங்களோ அதெல்லாத்தையும் ஒரு நோட்டுல எழுதி வச்சி கணக்கு பார்த்து வியாழன்கிழமை அதுக்கான ஒரு ஆசிரியர் கிட்ட கொடுத்து கையொப்பம் வாங்கணும். அதே மாதிரி ஒரு நாள் புதன்கிழமை. அந்த நாள் என்னால மறக்கவே முடியாது. நான் பைசாவை எண்ணி ஸ்கூல்ல கணக்கு பார்த்துட்டு பேக்ல எடுத்து வச்சிட்டேன். வீட்டுக்கு வந்து செக் பண்ணி பார்க்குறப்பா காச காணும். மனசு துடிக்குது. எங்கயோ தொலைச்சிட்டோம். இனி அவ்ளோதான். இதை நான் தானே கட்டணும். அப்பா அம்மா அண்ணா எல்லாரும் ஊருக்கு எங்கயோ போயிருந்தாங்க.எனக்கு என்ன பன்றதுனே தெரில. மனசு கடந்து துடிக்குது. ஆனா எனக்கு அழுகை வரல. நான் ரெண்டு மூனு தடவை என் ஸ்கூல் பேக் அ செக் பண்ணி பார்த்தேன். கிடைக்கல. ஆனா மனசுல என் காசு எங்கயும் போகாது. அது இங்க தான் இருக்கு. அப்படின்னு தான் தோணுட்டி இருந்தது. அப்ப உடனே நான் கடவுள்கிட்ட மண்டிப்போட்டு கேட்டேன்..எனக்கு தெரியும். அந்த பைசா இங்க தான் இருக்கு. எங்கண்ணு சொல்லுங்க அப்படின்னு கேட்டேன். அப்புறம் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு மறுபடியும் என் பேக் செக் பண்ணேன். அப்ப எனக்கு காசு நான் வச்சுருந்த அதே பர்சோட கிடைச்சது. அத பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். உடனே அவருக்கு நன்றி சொன்னேன். அப்புறம் இன்னொரு டைம் யாருக்கோ நான் உதவ போன டைம் அது எனக்கு பாதகமா அமைஞ்சிடுச்சி. ஆனா அந்த இன்சிடென்ட் எனக்கு நியாபகம் இல்ல. அப்ப என்கிட்ட அனுமனோட ஸ்தோத்திரம் ஒண்ணு இருந்தது. அத நான் மனப்பாடம் பண்ணி வச்சிருந்தேன். அந்த சம்யம் எனக்கு அது நியாபகம் வந்துச்சு. உடனே ஒரு மூணு தரம் அத அப்படியே சொன்னேன். அப்புறம் எனக்கு வந்த அந்த ஆபத்து என்னை விட்டு விலகி போயிடுச்சி. இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு. ஆனா எதுமே நியாபகத்துக்கு வரல. என்ன பொறுத்தவரை என்னை கடவுள் எப்பவும் காப்பாத்துவாருன்னு நம்பிக்கை இருக்கு. தவறான பாதையில நான் போகும் போது என்னை நிச்சயம் அதிலிருந்து விலக்கிடுவாருன்னு நம்புவேன்.
72.உங்களின் மனங்கவர்ந்த நகைச்சுவைத் துணுக்கு : துணுக்கு இதுக்கும் நம்ம கூகுளில தான் தேடணும்.இதோ வர்றேன்... நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.என்னோடு கடைக்கு வந்தாயா?செல் வாங்கித் தந்தாயா?ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?பில் பணமாவது கட்டினாயா?அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும் உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்குஎன் நம்பரையாவது கொடுத்தாயா!!மானங்கெட்டவனே!யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.எடு உன் செல்லை; போடு அதைக் கீழே; எடு ஒரு கல்லை; கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை…....ஹி..ஹி... ..ஹி..ஹி... ..ஹி..ஹி...
73.ஆளில்லாத தீவில் வசிக்க நேர்ந்தால் நீங்கள் வைத்திருக்க விரும்பும் 5 பொருட்கள்: 5 பொருளா..கண்டிப்பா என் போன் மற்றும் சார்ஜர். அப்புறம் ஒரு கம்பியூட்டர் விட் ஆல், அப்புறம் ஒரு தோழி என் தேவி. அப்புறம் ஒரு தோழி அர்ச்சனா, அப்புறம் ஒரு குழந்தை என் யுவராஜ்..எப்படீங்க யாருமில்ல வாழ்றது...அதுதானுங்க..ஹி..ஹி...பொருளா ந்னு கேட்கப்படாதுங்க. ஆளிள்ளாத இடத்துல எனக்கு இவங்க எல்லாரும் கூட இருந்தா தான்ங்க எனக்கு நிம்மதி.
74.உலக நடப்புகளில் நீங்கள் மகிழ்வுறுவது எதனையிட்டு : யார் என்ன பண்னாலும் எங்க என்ன நடந்தாலும் நமக்கென்னன்னு போற நம்ம நடத்தை தானுங்க..ஹி..ஹி...இது உண்மை ஊமையாகும் காலமுங்க..
75.உலக நடப்புகளில் நீங்கள் வருந்துவது எதனையிட்டு : கலாச்சார சீரழிவு, மங்கிடும் மனித மனங்கள்
76.உலகில் இருக்கக்கூடாது என்று நீங்கள் எண்ணும் அறிவியல் கண்டுபிடிப்பு : தீய எண்ணங்களால் பயன்படுத்தப்படும் எந்த ஒரு பொருளுமே.
77.இதைக் கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் விரும்புவது : கெட்ட வழியில போறவங்கள திருத்துற ஒரு சாப்ட்வேர்....
78.உங்கள் உடலில் ஏதேனும் ஒரு வசதியை இணைத்துக்கொள்ளலாம் என்று ஒரு வரம் கிடைத்தால் நீங்கள் வேண்டுவது : எல்லார் மனசையும் புரிஞ்சுக்குற மாதிரி ஒரு விரல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்...ஹி ஹி ஒரே ஒரு விரல் தாங்க
80.உங்கள் இறுதி 24 மணி நேரத்தை எவ்வாறு செலவழிக்க விருப்பம். என் தம்பி யுவராஜ் கூட..சந்தோஷமா இருக்கணும்.
81.உங்களிடமிருக்கும் இறுதி 10,000 பணத்தை எவ்வாறு செலவழிக்க விருப்பம்..? இந்த பணத்தை பார்த்தா பயமா இருக்கு. எனக்கு வேணாணுன்னு யாருக்காச்சும் குடுத்துருவேன்.
தமிழ்மொழி!
தன்னிலடங்கா தாயகத்தை
தனக்குள் புகுத்தி,
தரணியெங்கும்
தழைத்தோங்கி,
தென்னாடும் தேர்ப்பூட்டி,
தீபச்சுடராய் மகிழ்ந்திடும்,
தைநாளே
பிறந்திட்டு,
மன்னாரும் வாழ்த்துற,
தொன்றுதொட்டு போற்றிடும்,
தொன்மையாய் நீ (என்
தமிழே)!
தமிழாம்,
தமிழ்ச்சுவையாம்,
செந்தமிழ்க் கவியாம் (என் தமிழே)!
தாரகமந்திரமாய் ஒலித்திடும்,
தமிழின் ஓசை!
திகட்டா
சொற்ச்சுடரின்,
தெளிவுறும் அமுதோசை!
தெவிட்டாத தமிழே!
தேன்மழை சாரலே!
தணலெனினும் எமக்கு நீ!!!!
தணியா வேட்கையே (என்
தமிழே)!!!!!!!!!!
தவிப்பு...
எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...
முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...
எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...
நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....
பிரிவு........!
குழந்தைகள்!
அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!
இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!
உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!
எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!
ஐஞ்சுவை மொழிகளை அழகாய் பேசியே,
ஒன்றன்பின் ஒன்றாக பிள்ளைத்தமிழில் பாடி,
ஓடம்போல் நம் நெஞ்சில் புகுந்திட்டே,
ஔடதமாய் விளங்கிடும் அர்த்தமில்லா
புன்னகை!
காதல்!!!
விழிமூடும் கதவினுள்ளே புகுந்திட்டே
மனச்சிறைக்குள் ஒளிந்து கொண்டு
சத்தமில்லா புன்னகையால் நம்மை
மந்திரலோகத்தில் துயில செய்யும்
வானில்லா அஷ்ட வர்ணஜாலங்கள்!
அர்த்தமற்ற புன்னகையால் நகைத்து,
கணல்கொண்ட பார்வையை புதைத்து,
சௌந்தர்ய கானம் கொண்டு,
சங்கீதமாய் சலனம் இசைத்து,
எண்ணிலடங்கா கவித்துவம் விளக்கி,
தன்னையே விளக்கிய கனவுத்தேவதை!
காதல்!
காதல்!
கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!
பார்வையில் பேசிக்கொண்டே பரிவர்த்தனை செய்யும் குழந்தை...!
கனவுக்குள் ஊஞ்சல் கட்டி, ராட்டினம் போல் சுழலும் நிந்தை...!
ஈருயிர் ஒர் உயிராய் ஜெனித்திடும் விந்தை...!
கைகோர்த்து நடக்கையில் மனதில் பூத்திடும் பட்டாம்பூச்சி...!
தொலைதூர நோக்கிலும் கண் இமைக்காமல் பார்த்திடும் பட்சி...!
உறவென்று ஒரு சொந்தம் புதிதாய் பிறந்திடும் மகிழ்ச்சி...!
என்னாளும் இது நிலைத்திட இறைவனே இதற்கு சாட்சி...!
உள்ளம் மட்டும் கலந்துரையாடும் பட்டிமன்றம்...!
காவியங்கள் இதை விளக்கிடும் என்றும்...!
இதமாய் கவி நடனமாடிடும் சுரங்கம்...!
கண நொடியும் ஏங்கிடும் வசந்தம்...!