Friday, September 3, 2010

நீரில் இடும் கோலங்கள்.


 நிறைவேறா ஆசை எனினும் நினைக்காதநெஞ்சம் இல்லை

வாடாத மலர் எனினும் வர்ணிக்காத கண்கள் இல்லை

கேட்காத பாடல் எனினும் மயங்காத உள்ளம் இல்லை

தொடாத தேகம் எனினும் தொட்டுசெல்லாததென்றல் இல்லை

பேசாத விழிகள் எனினும் கேட்காத செவிகள் இல்லை

உள்ளம் உரைப்பதை எண்ணமென்ற ஏட்டிலே

எதிர்காலமென்ற எழுத்தாணி கொண்டு

கடிதமாய் வடித்திட்ட வரிகள்

உறக்கமென்ற கனவுக் கோட்டைக்குள்ளே

யாருமற்ற மாயலோக வனாந்தரத்தில்

பறந்துகிடக்கின்றன நொடிப்பொழுதினில்

மறைந்துபோகும் நீரிலிட்ட கோலத்தின் சாயலாய்

கனவென்ற மாளிகைக்குள் கவிதைகளாய் பூக்கின்றன!

2 comments:

Indira said...

எனது இக்கவிதை திரு.ஒட்டக்கூத்தர் என்பவரது ப்ளாக்ஸ்பாட்டில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூன்றாவது பரிசினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிவஹரி said...

கவிதையும் அருமை

கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்..