Tuesday, June 22, 2010




அன்பே


உன் தரிசனமின்றி வாடிக்கிடக்கின்றேன்


நீரில்லா மீனாய்...நிலமில்லா மலராய்...

விரசத்தின் வெளிப்பாடு

கண்கள் மோதிக்கொண்டால் அது காதல்

உள்ளம் மோதிக்கொண்டால் அது என்ன?

விரசத்தின் வெளிப்பாடு

இதயத்துடிப்பு..


மறந்தும்


நினைக்க துடிக்கும்


என் இதயத்திற்கு சொல்கிறேன்


நிறுத்திவிடு


உன் நினைவுகளை

என்னிடமிருந்தல்ல

என் துடிப்பை

க‌ண்ணீர்த்துளிக‌ள்.....



க‌ன‌வினில் க‌வ‌லை தீர்த்திடுவாய் என்று

நினைவினில் உனை நினைக்காம‌ல் இருந்தேன்...

ஆனால்...

அத‌னுள்ளும் வ‌ந்தே என்னை அடிமை ஆக்கி விட்ட‌தேனோ..????

சொல்வாய் ம‌ன‌மே........க‌ண்ணீர்த்துளிக‌ள்.....

ஊமைநெஞ்சம்

இதயங்கள் மட்டும் பேசிக்கொள்கையில்,

இமைகள் பரிவர்த்தனை செய்கின்றன...

ஊமைநெஞ்சம்

மழை

பார்வையில் சலனமில்லை...

பாதையிலும் சலனமில்லை...

எங்கு கண்டாய்..உன் சலனத்தை...மழை

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை..

இருப்பினும் எதிர்பார்ப்பின்றி யாரும் வாழ்வதில்லை..

வாழ்க்கைப்பயணம்



கடந்து வந்த பாதைகள் கற்றுத் தருகின்றன நமக்கு...

வாழ்க்கை என்றால் என்னவென்று....

கடக்க போகும் பாதைகள் கற்றுத்தர போகின்றன நமக்கு...

வாழ்க்கை எவ்வாறு இருக்குமென்று....

கடக்கின்ற இப்பாதையோ கற்றுக்கொள்ள சொல்கின்றன நம்மை...

வாழ்க்கை எப்படி வாழ்வதென்று....

அம்மா


அண்டச்சராசரமும் உனக்குள் அடங்கும்...

நீ சொல்லும் ஒரு வார்த்தைக்குள்....அம்மா

ஒழுக்கம்

மனமே...

உன்னில் அடைபட்டு கொண்டிருக்கும் தீயநெறிகளை உடைத்தெறி...

வாழ்க்கை என்னும் பூந்தளிர் உன்னில் மலரும்

நினைவுகள்

காலங்கள் கடந்தாலும் காட்சிகள் மாறாது...

நாட்கள் நகர்ந்தாலும் நினைவுகள் அகலாது....

கனவுகள்




அன்று கண்ட காட்சி நிஜமானது

இன்று தோள் சாயும் உன் அன்பு கிடைத்ததால்

நண்பனாய் என்னுள் புகுந்து நாகரீக கள்வனானாய்

கல்லுக்குள் ஈரம்போல உன்னுள் அன்பு கண்டதை

பார்த்தே உருகின என் ஊமைநெஞ்சம்

கண்ணும் கண்ணும் நோக்கியே பலமணித்துளிகள்

மயங்கி பேசிக்கழித்தோம்

எண்ணிலடங்கா நாட்களை காதல் ஜூரம்

தாக்கியும் களித்தோம்

உன் ஒரிரு வார்த்தைகளை ஓராயிரம் தரம்

உச்சரிக்க கேட்டு ரசித்தேன்
உன் ஜாடை பரிமாற்றங்களை அங்கங்கமாய்

பார்த்து வியந்தேன்

நெடுந்தொலைவு கண்டினும் உன் முகம்

எனக்கு வைரலோகம் போல‌சட்டென

அருகில் நின்றே தலைசாய்த்திடும்
சிறு புன்னகையால்

என்ன சொல்ல ஏது சொல்ல

உன்னருகில் நிற்கும் தருணம்

யார் கேட்பார் என் மன சஞ்சலத்தை

அது உச்சரிக்கும் பாஷை

தான் என்னவோ

உனக்குள் மறைந்து நான்

என்னை தொலைத்தேன்

இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்

கண்டும் காணத்துடிக்கின்ற

என்னை உன்னில் சரிபாதியாக‌

அன்பின் அரிதாரம் நீயே


உன் வாசமே என்னில் கடைசி மூச்சாக‌

உன் பார்வையே என்னில் காட்சியாக

உன் புன்னகையே என்னில் பரிமாற்றமாக

அரிதாய்தோன்றியே என்னில் அன்பின் உறைவிடமாக‌

காதல் கவிதையே கண்ணின் கருவிழியே

முத்தாய் மலர்ந்த நறுமுகை மலரே

உன்னை கண்டபின் இம்மண்ணும் பிடித்துப்போனது

உன்னோடு பழகியப்பின் இவ்வாழ்வும் இனித்துப்போனது

உன்னில் சரணடைந்தேன் இப்புவியும் வசந்தமானதே!!!

ச‌ந்த‌ர்ப்ப‌ம்

விழித்திடும் த‌ருண‌ம் உன் ப‌ளிங்கு முக‌த்தினை

காணும் யோக‌ம் வாய்க்குமோ என் விழிக‌ளுக்கு!!!

ம‌றைந்திடும் த‌ருண‌ம் உன் ம‌டியினில்

சாயும் யோக‌ம் வாய்க்குமோ என் இமைகளுக்கு!!!

காதல்


மானசீகமாய் சுமக்கிறேன்

உன்னையும் உன் கருவையும்

யாருக்கும் தெரியாத

என் மனக்கருவறையில்

நினைவுகளாக...காதல்

வ‌லி..!!

உதிரும் மலருக்கு ஒரு நாள் தான் மரணம்!

பேசாத அன்புக்கு தினந்தினம் மரணம்!!!

ஏக்கம்!!!



கண்ணாளனே.......!


உன்னை கண்ட நாள் முதலாய்


காதல் கொண்டேன்


கைகோர்த்து பேசி சென்ற


நாட்கள் கண்முன்னே தோன்றுதடா


கனவினில் உன் முகம் பார்த்திட


கண்களும் ஏங்குதடா


மனம் தன்னில் உன் நியாபகமோ


எப்போதும் அசைந்தாடுதடா


புன்னகையித்து கொண்டு சென்று


விட்டாய் என்னை


எப்போது திருப்பி தருவாய்


எனக்கு உன் நினைவுகளை


உன் மார்பினில் தலைசாய்த்திடும்


பொழுதுகள் எப்போது எனக்கு வாய்க்குமோ


என்றுமே உனக்கு நான் எனக்கு நீ


என்ற வார்த்தைகள்


எப்போது நிஜமாகிடுமோ


ஓராயிரம் நிந்தைகளுடன்


ஏங்கும் நெஞ்சம் என்று இளைப்பாறிடுமோ


கேள்விக்குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க


நீ வருவாயென


காலமெல்லாம் காத்திருக்கும்


என் இதயம் நம் உயிர் காதலுடன்

கனவுகளுடன்....

உன் நினைவுகளை முழுவதுமாய்

நான் எப்போது புரிந்து கொள்வேன்

கற்றுக்கொடு கண்களால் கண்களுக்கு...!!!