தவிக்கின்றது வார்த்தை நா தரகர்களுக்கிடையில்
உன்னை எனக்கு பிடிக்கும் நண்பனாய்
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் காதலனாய்
உன்னை எனக்கு என்றுமே பிடிக்கும் கணவனாய்
சொல்வாயா??? நானும் உந்தன் உறவென்று!!!
கடலை மாவு சப்பாத்தி
தேவையான பொருட்கள்
கடலைமாவு 1 1/2 கோப்பை
மைதா மாவு 3/4 கோப்பை
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
1/2 கொத்து கொத்தமல்லி இழைகள்
7 நறுக்கிய பச்சைமிளகாய்
சில புதினா இலைகள்
1/2 தேக்கரண்டி மாதுளம் விதைதூள்
1 மெல்லியதாக அரிந்த வெங்காயம்
1 தேக்கரண்டி சோம்பு
1 கோப்பை எண்ணெய்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவையும், மைதா மாவையும்கொட்டவும். அதில் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கொட்டி கிளரவும். சிறிதளவு தண்ணீரும் சற்று எண்ணெயும் ஊற்றி பிசையவும். (மாவு மெதுவாக ஆவதற்கு பால் ஊற்றுவார்கள். நன்றாகப் பிசைந்துவிட்டால் பால் தேவையில்லை) பிசைந்த மாவு கடினமாகவோ, அல்லது தண்ணீராகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.சிறிய சிறிய உருண்டைகளாப் பிடித்து சப்பாத்தி போல தேய்க்கவும். தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வறுக்கவும். எண்னெய் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் எண்ணெய் இல்லாமல் மெதுவான தீயிலும் சுடலாம். சப்பாத்தி போலச் சாப்பிட சுவையானது.
தன்னிலடங்கா தாயகத்தை
தனக்குள் புகுத்தி,
தரணியெங்கும்
தழைத்தோங்கி,
தென்னாடும் தேர்ப்பூட்டி,
தீபச்சுடராய் மகிழ்ந்திடும்,
தைநாளே
பிறந்திட்டு,
மன்னாரும் வாழ்த்துற,
தொன்றுதொட்டு போற்றிடும்,
தொன்மையாய் நீ (என்
தமிழே)!
தமிழாம்,
தமிழ்ச்சுவையாம்,
செந்தமிழ்க் கவியாம் (என் தமிழே)!
தாரகமந்திரமாய் ஒலித்திடும்,
தமிழின் ஓசை!
திகட்டா
சொற்ச்சுடரின்,
தெளிவுறும் அமுதோசை!
தெவிட்டாத தமிழே!
தேன்மழை சாரலே!
தணலெனினும் எமக்கு நீ!!!!
தணியா வேட்கையே (என்
தமிழே)!!!!!!!!!!
எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...
முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...
எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...
நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....
அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!
இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!
உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!
எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!
ஐஞ்சுவை மொழிகளை அழகாய் பேசியே,
ஒன்றன்பின் ஒன்றாக பிள்ளைத்தமிழில் பாடி,
ஓடம்போல் நம் நெஞ்சில் புகுந்திட்டே,
ஔடதமாய் விளங்கிடும் அர்த்தமில்லா
புன்னகை!